செய்திகள்
டெங்கு காய்ச்சல்

சித்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவி, விவசாயி பலி

Published On 2019-11-06 11:45 GMT   |   Update On 2019-11-06 11:45 GMT
ஆந்திர மாநிலம் சித்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி மாணவி மற்றும் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் சந்தபேட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன்- பத்மாவதி தம்பதியரின் மகள் ஜாகுருத்தி (11). சித்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவிக்கு 10 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் அடித்தது. மாணவியை சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சையளித்தனர்.

ஆனாலும் மாணவிக்கு காய்ச்சல் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜாகுருத்தி பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் திருப்பதி அடுத்த ஏர்போடு கொத்தகால்வாய் பகுதியை சேர்ந்தவர் கோபால் ரெட்டி (51), விவசாயி. இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உறவினர்கள் கோபால் ரெட்டியை ஏர்பேடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து கோபால் ரெட்டியை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் தூய்மை பணி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News