செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அலகாபாத் ஐகோர்ட்டு செயல் இழந்துவிட்டது- சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம்

Published On 2019-11-04 09:41 GMT   |   Update On 2019-11-04 09:41 GMT
கிரிமினல் வழக்குகளை கையாள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை கூறி அலகாபாத் ஐகோர்ட்டில் ‘சிஸ்டம்’ செயல் இழந்து விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
புதுடெல்லி:

அலகாபாத் ஐகோர்ட்டில் குற்ற வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சூர்யா சந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அலகாபாத் ஐகோர்ட்டின் செயல்பாடுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக விமர்சனம் செய்தது.

கிரிமினல் வழக்குகளை கையாள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை கூறி அலகாபாத் ஐகோர்ட்டில் ‘சிஸ்டம்’ செயல் இழந்து விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கிரிமினல் வழக்குகள் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டி இந்த கருத்தை பதிவு செய்தது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News