செய்திகள்
ராஜஸ்தான் போலீஸ்

உடல் எடை, மார்பளவு குறித்த விவரங்களை சமர்ப்பிக்க ராஜஸ்தான் போலீசாருக்கு உத்தரவு

Published On 2019-10-24 09:44 GMT   |   Update On 2019-10-24 09:44 GMT
ராஜஸ்தானில் உள்ள 4 மாவட்டங்களில் பணியாற்றும் போலீசார் தங்களது எடை, மார்பு மற்றும் இடுப்பு அளவுகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிகானெர்:

நல்ல உடல்நலம் மற்றும் சரியான உடல் கட்டமைப்பை பராமரிக்க போலீசாரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் எடை, மார்பு மற்றும் இடுப்பு அளவு பற்றிய விவரங்களை சமர்ப்பிக்குமாறு, ராஜஸ்தானின் நான்கு மாவட்டங்களில் உள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

காவல் துறையினரின் பணித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானெர், கங்காநகர், ஹனுமன்கர் மற்றும் சுரு மாவட்டங்களில் உள்ள போலீசார் அனைவரும் இந்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் உடல் எடை, மார்பு மற்றும் இடுப்பு அளவு உள்ள போலீசாரை கண்டறிந்து உடல் நலத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். 

சராசரி அளவுருக்களை விட அதிகமாக உள்ள போலீசார் களப்பணியில் இருந்து வேறு பணிகளுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால் அம்மாதிரியான எந்த நடவடிக்கையினாலும் போலீசார் மனச்சோர்வு அடையமாட்டார்கள். காவல்துறையில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் நல்ல உடல் தகுதியுடன் செயல்பட வேண்டும். அவர்களின் செயல் திறன் மேம்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News