செய்திகள்
மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினர்

பீகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி- 20 பேர் மாயம்

Published On 2019-10-04 05:10 GMT   |   Update On 2019-10-04 05:10 GMT
பீகார் மாநிலம் கத்திகார் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேரைக் காணவில்லை.
கத்திகார்:

பீகார் மாநிலம் கத்திகார் மாவட்டம் வஜித்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அண்டை மாநிலமான மேற்கு வங்காள மாநிலத்தின் ராம்பூர் ஹாட் பகுதியில் பொருட்கள் வாங்கிவிட்டு நேற்று இரவு ஊர் திரும்பினர். அவர்கள் படகு மூலம் மகாநந்தா ஆற்றைக் கடந்து சென்றனர். சுமார் 80 பேருடன் சென்ற அந்த படகு, திடீரென நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்தது.

படகில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீந்திக் கரைசேர்ந்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஆற்றில் குதித்து சிலரை காப்பாற்றினர்.

விபத்து குறித்து தகவல் அந்த பேரிடர் மீட்பு படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் விழுந்து தத்தளித்த பாஜக எம்பி ராம் கிரிபால் யாதவ் உள்ளிட்ட  சிலரை மீட்புக் குழுவினர் மீட்டனர். 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.

சுமார் 40 பயணிகள் செல்ல வேண்டிய படகில், இரண்டு மடங்கு பயணிகளை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News