செய்திகள்
பாஜக கொடி (கோப்பு படம்)

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Published On 2019-10-01 10:31 GMT   |   Update On 2019-10-01 10:31 GMT
மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநிலத்தில் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதற்கான தேர்தல் வரும் 21-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று  24-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, சிவ சேனாவுடன் கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணியில் பாஜக-விற்கு 125 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், பாஜக சார்பில் 125 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மகராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் (தென் கிழக்கு) தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News