செய்திகள்
பிடிபட்ட கடத்தல்காரர்களுடன் கடலோர காவல் படையினர்

அந்தமான் கடல் பகுதியில் ரூ.300 கோடி போதைப்பொருள் பிடிபட்டது

Published On 2019-09-21 10:46 GMT   |   Update On 2019-09-21 10:46 GMT
இந்திய கடலோர காவல் படையினர் அந்தமான் கடல் பகுதியில் நடத்திய கண்காணிப்பு பணியின்போது 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றி 6 பேரை கைது செய்தனர்.
போர்ட் பிளைர்:

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்ப்படும் போதைப்பொருள்கள் நமது நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

எல்லைகளை கடந்து தரைவழியாக மட்டுமின்றி, விமானம் மற்றும் படகுகள் மூலமாகவும் போதைப்பொருட்களை இந்தியாவுக்கு கடத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் அந்தமான் கடல் பகுதியில் நடத்திய கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு படகை மடக்கி சோதனை செய்தனர்.

அந்த படகினுள் ‘கெட்டமைன்’ எனப்படும் கொடிய போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். சர்வதேச சந்தையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 1160 ‘கெட்டமைன்’போதைப்பொருளை கைப்பற்றி அந்த படகில் இருந்த 6 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News