செய்திகள்
அமித் ஷா

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் -அமித் ஷா கருத்து

Published On 2019-09-14 04:55 GMT   |   Update On 2019-09-14 05:30 GMT
நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:

பிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுவதன் காரணமாக, ஒருவார காலம் தொடர்ச்சியாக சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்தது. இந்த சேவை வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்தார்.

இதனையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டில் அவரவர் தாய்மொழியையே பேசும் அதே நேரத்தில் இந்தியை அனைவரும் பயில வேண்டும். மக்கள் இந்தியில் பேசுவதற்கு பயில வேண்டும். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.

இந்தி ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். பல்வேறு மொழிகள் இந்தியாவில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு’ என கூறியுள்ளார்.

இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையின் அடிப்படையில் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News