செய்திகள்
ராணுவம் மீது கல் வீசும் கும்பல் (கோப்பு படம்)

காஷ்மீரில் ராணுவம் மீது கல் எறிந்த இளைஞர் உயிரிழப்பு

Published On 2019-09-04 13:12 GMT   |   Update On 2019-09-04 13:12 GMT
காஷ்மீரில் ராணுவம் மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலின்போது பாதுகாப்பு படையினரின் தடியடியில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.

இதனால் ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் மீது சில பகுதிகளில் அவ்வப்போது போராட்டங்களும், கல்வீசி தாக்கும் சம்பவங்களும் அரங்கேறிவருகிறது. 

இதற்கிடையில், ஸ்ரீநகரில் கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் ராணுவம் மீது கற்களை ஏறிந்து தாக்குதல் நடத்தினர். அவர்களை   ராணுவத்தினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். 

அச்சம்பவத்தின் போது ராணுவத்தின் தடியடியில் இளைஞர் ஒருவர் படு காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த அவர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், காஷ்மீரில் கடந்த மாதம் 5-ம் தேதி லாரி ஓட்டுநர் ஒருவர் மர்மநபர்கள் நடத்திய கல் ஏறி சம்பவத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News