செய்திகள்
மாதிரி படம்

ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

Published On 2019-08-31 11:49 GMT   |   Update On 2019-08-31 11:49 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய மாநில அரசு போக்குவரத்து கழக நடத்துனர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வருபவர் ராம் ஸ்வரூப் பிஷ்னாய். இவர் ஸ்ரீகங்காநகர் மாவட்டம் அனுப்கார் டிப்போவில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது தலைமை மேலாளர் பெயரைச் சொல்லி சர்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்பந்ததார் ஒருவரிடம் ரூ.20000 லஞ்சம் கேட்டுள்ளார். அந்த ஒப்பந்ததாரர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், ராம் ஸ்வரூப் பிஷ்னாய் லஞ்ச பணமாக ரூ.18000 வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News