செய்திகள்
கோப்புப் படம்

மகாராஷ்டிராவில் கடந்த 8 மாதங்களில் 564 விவசாயிகள் தற்கொலை

Published On 2019-08-27 07:14 GMT   |   Update On 2019-08-27 07:14 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை மொத்தம் 564 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அவுரங்காபாத்:

வறட்சி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 26 தேதி வரை மொத்தம் 564 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என பிரதேச ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 131 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். 564 விவசாயிகள் தற்கொலை வழக்குகளில் 415 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம்  ரூ. 4.1 கோடி தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சரியான காரணங்கள் இல்லாததால் 103  பேரின் குடும்பங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மிகக்குறைவான மழைப்பொழிவு,  உரம் பற்றாக்குறை பிரச்சனை மற்றும் கடன் தொல்லை போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் குறைவான மழைப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன” என தெரிவித்தனர்.
Tags:    

Similar News