செய்திகள்
கேரளா நிலச்சரிவு

கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

Published On 2019-08-17 03:41 GMT   |   Update On 2019-08-17 03:41 GMT
கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நேற்று மழை ஓய்ந்தநிலையில், மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் பலியாகி உள்ளனர்.

இன்னும் 31 பேரை காணவில்லை. நிவாரண முகாம்களில் ஒன்றரை லட்சம்பேர் தங்கி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 22 டன் மருந்து பொருட்கள் நேற்று வந்து சேர்ந்தன.

Tags:    

Similar News