செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

Published On 2019-08-12 16:56 GMT   |   Update On 2019-08-12 16:56 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஷாமோலி மாவட்டத்தில் உள்ள பஞ்ச்பகாட், அலிகான் மற்றும் லங்கி  ஆகிய கிராமங்களில் கனமழை காரணமாக இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவு சம்பவத்தி சிக்கி ஒன்பது மாத குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது என்பது குறிப்பித்தக்கது.  

Tags:    

Similar News