செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகாவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலி, ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு - எடியூரப்பா

Published On 2019-08-10 08:32 GMT   |   Update On 2019-08-10 08:32 GMT
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வெள்ளப் பெருக்கினால் 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் 24 பேர் பலியானதாகவும் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது.
 
தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான அளவில் மழை பெய்யாத நிலையில் ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. வட கர்நாடகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



தொடர்மழையால் பல மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா, கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் 24 பேர் பலியானதாகவும் தெரிவித்தார்.

மழை, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. ஒருசில கிராமங்களையும் மீண்டும் கட்டமைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
Tags:    

Similar News