செய்திகள்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்

‘புஜபல தேசியவாதம்’ எந்த மோதலையாவது தீர்த்துள்ளதா? - ப.சிதம்பரம் கேள்வி

Published On 2019-08-09 00:28 GMT   |   Update On 2019-08-09 00:28 GMT
காஷ்மீர் விவகாரத்தில் ‘புஜபல தேசியவாதம்’ உலகத்தில் எந்த மோதலையாவது தீர்த்து இருக்கிறதா? என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியுமான ப.சிதம்பரம், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், காஷ்மீரை இரண்டாக பிரித்ததையும் காங்கிரஸ் கண்டிக்கிறது. இது ஒரு ஜனநாயக படுகொலை.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பெற்ற காஷ்மீர் இளைஞர் ஷா பேசல், ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்துள்ளார். அவர் மத்திய அரசின் நடவடிக்கையை ‘மிகப்பெரிய துரோகம்’ என்று கூறியுள்ளார். அவரே அப்படி நினைக்கும்போது, காஷ்மீரை சேர்ந்த சாதாரண மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். ‘புஜபல தேசியவாதம்’ உலகத்தில் எந்த மோதலையாவது தீர்த்து இருக்கிறதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News