செய்திகள்
ப சிதம்பரம்

காஷ்மீர் விவகாரம்: வரும் காலத்தில் தமிழகமும் பிரிக்கப்படலாம் -ப.சிதம்பரம்

Published On 2019-08-06 06:29 GMT   |   Update On 2019-08-06 06:29 GMT
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் தமிழகம் கூட பிரிக்கப்படலாம் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புது டெல்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்ததை போல, வருங்காலத்தில் மத்திய அரசு மேற்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் தடுக்க இயலுமா?

தமிழகத்தையே மத்திய அரசு இரண்டாக பிரித்தால் என்ன செய்ய முடியும்? அதிமுகவைச் சேர்ந்த என் நண்பர்கள் சிலர் இங்கு இருக்கிறார்கள். இதன் விளைவை அவர்கள் உணரவே இல்லை.



இந்த முடிவை எந்தவொரு மாநில அரசுக்கும் செய்ய முடியும். இது மிகவும் தவறான முடிவு என்பதை வருங்கால சந்ததியினர் உணருவார்கள். ஏதோ துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடக்கப்போகிறது என எதிர்பார்த்தோம்.

ஆனால் ஒரு கெட்ட கனவு போல இப்படி ஒரு பேரழிவான நடவடிக்கையை எடுப்பார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Tags:    

Similar News