செய்திகள்
அயோத்தி நில வழக்கு

அயோத்தி நில வழக்கு: மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Published On 2019-08-01 10:50 GMT   |   Update On 2019-08-01 10:50 GMT
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்ற வழக்கில் மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அதேசமயம், அயோத்தி வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.

ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய இந்த மத்தியஸ்த குழு, பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு ஏற்கேனவே இடைக்கால அறிக்கை தாக்கல் செய்திருந்தது. மத்தியஸ்த குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.



இந்நிலையில், மத்தியஸ்த குழுவால், அயோத்தி வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால், நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என வாதிகளில் ஒருவரான கோபால் சிங் விஷாரத் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத்தியஸ்த குழுவை அமைத்த பிறகு, அதன் அறிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டது. மத்தியஸ்த குழு விரிவான அறிக்கையை வரும் 18-ம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் மத்தியஸ்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்த.
Tags:    

Similar News