செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்

Published On 2019-07-20 08:26 GMT   |   Update On 2019-07-20 08:26 GMT
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

நாட்டின் சில மாநிலங்களில் பதவி வகிக்கும் கவர்னர்களை இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அவ்வகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் கவர்னராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தின் புதிய கவர்னராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 





பீகார் மாநிலத்தின் கவர்னர் லால் ஜி தான்டன் மத்திய பிரதேசம் மாநிலத்தின் கவர்னராக மாற்றன் செய்யப்பட்டுள்ளார். பீகாரின் புதிய கவர்னராக பாகு சவுஹான், நாகலாந்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி, திரிபுரா மாநிலத்தில் புதிய கவர்னராக ரமேஷ் பய்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News