செய்திகள்
தோப்புக்கரணம்

அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் தோப்புகரண யோகா

Published On 2019-07-09 06:14 GMT   |   Update On 2019-07-09 06:14 GMT
அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் முயற்சியாக பள்ளிகளில் தோப்புகரண யோகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தோப்புக்கரணம் போட வெச்சுட்டாங்களா...?

நான் வந்து கேட்கிறேன் என்று வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு பள்ளிக்கு கிளம்பி விடுகிறார்கள் பெற்றோர்.

அந்த ஒரு தண்டனைக்காக அந்த பள்ளியே களேபரமாகி பெரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும். பள்ளிகளில் தோப்புக்கரணம் என்பது தண்டனையாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வழிபடுவது என்பது காலம் காலமாக இருந்துவரும் பழக்கம்.

வழிபாட்டுக்கோ அல்லது தண்டனைக்கோ போடும் தோப்புக்கரணம் கூட உடலுக்கு நல்ல பயிற்சியாகவும் அமைந்து இருப்பதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகள் தினமும் தோப்புக்கரண யோகா செய்வதை கல்வித்துறையே கட்டாயமாக்கி உள்ளது.


இதுபற்றி அரியானா மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ராஜீவ் பர்‌ஷத் கூறும்போது, தோப்புக்கரணம் போடுவது குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்கும்.

இந்த தோப்புக்கரண யோகா பிவானியில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு பள்ளியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தினமும் காலையில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தின் போது 14 முறை தோப்புக்கரணம் போட வேண்டும்.

இதை கண்காணித்து குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை பார்த்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள யோகா பல்கலைக்கழக பேராசிரியரும் தோப்புக்கரணம் போடுவது நினைவாற்றலை வளர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News