செய்திகள்
பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட ஜெகநாதர், பலதேவர், சுபத்ரா தேவி மணற்சிற்பங்கள்

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று துவக்கம்- சுதர்சன் பட்நாயக்கின் அசத்தல் மணற்சிற்பம்

Published On 2019-07-04 03:29 GMT   |   Update On 2019-07-04 03:29 GMT
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஜெகநாதர் சிற்பம் செதுக்கி உள்ளார்.
பூரி:

ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரதயாத்திரை கோலாகலமாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்க உள்ளது. 10 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த ரத யாத்திரையில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத யாத்திரையை முன்னிட்டு பூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில், ரத யாத்திரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் தனது கைவண்ணத்தில் மணற்சிற்பங்களை செதுக்கி உள்ளார்.  ஆலயத்தில் இருப்பதுபோன்று, ஜெகநாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியின் மணற்சிற்பங்களுக்கு வண்ணக் கலவை மூலம் வண்ணம் தீட்டியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த சிற்பங்களை புகைப்படம் எடுத்து சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜெய் ஜெகநாத்... ரத யாத்திரையை முன்னிட்டு அனைவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்தனை செய்யுங்கள்” என கூறியுள்ளார்.

Tags:    

Similar News