செய்திகள்

இனி வங்கிகள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தான் இயங்குமா?

Published On 2019-06-05 11:01 GMT   |   Update On 2019-06-05 11:01 GMT
இந்தியாவில் இயங்கும் வங்கிகள் இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் தான் இயங்கும் என தகவல் பரவுகிறது. இது உண்மையா என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



இந்தியாவில் இயங்கும் வங்கிகள் இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது.



வைரலாகும் அந்த தகவலில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆணைப்படி இந்தியாவில் வங்கிகள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும் வங்கிகளின் பணி நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் பரவும் இந்த குறுந்தகவலில் இருக்கும் தகவல் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அனுப்பப்பட்டதல்ல. இணையத்தில் பரப்பப்படும் குறுந்தகவல்கள் முற்றிலும் பொய் என இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் இணையத்தில் பரவும் தகவல் போலி என்பது உறுதியாகிறது.



இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சில வர்த்தக வங்கிகள் இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் சார்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இதுபோன்று எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News