செய்திகள்

பானி புயலால் புவனேஸ்வர் விமான நிலையம் சேதம்

Published On 2019-05-03 18:31 GMT   |   Update On 2019-05-03 18:31 GMT
பானி புயல் காரணமாக ஓடிசா மாநிலத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையமும் சேதமடைந்துள்ளது. #CycloneFani
புவனேஸ்வர்:

வங்க கடலில் உருவான பானி புயல் ஒடிசாவை இன்று சூறையாடியது. இந்த புயல் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் உள்ள மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக 3 பேர் உயிர் இழந்துள்ளனர். 160 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த புயல் காரணமாக மாநிலத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையமும் சேதத்தை சந்தித்து உள்ளது. அங்குள்ள ஏராளமான உபகரணங்கள் புயலில் சிக்கி சேதமடைந்ததாக விமான நிலைய ஆணையம் கூறியுள்ளது.



இந்த சேதம் காரணமாக அங்கிருந்து விமான இயக்கங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதனால் புவனேஸ்வருக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. #CycloneFani 
Tags:    

Similar News