செய்திகள்

நமோ டி.வி.க்கு அனுமதி - தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்

Published On 2019-04-03 08:46 GMT   |   Update On 2019-04-03 08:46 GMT
பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நமோ டி.வி.யை தொடங்க அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #EC #NaMoTV
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அண்மையில் நமோ டிவி தொடங்கப்பட்டது. இந்த டிவியின் லோகோவில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது. மோடியின் பிரசாரம் தொடர்பான செய்திகளை இந்த தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நமோ டிவி தொடங்க அனுமதி அளித்தது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இரண்டு கட்சிகளும் புகார் அளித்தன.



இந்த புகார்களை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நமோ டி.வி.யை தொடங்க அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், நமோ டிவி உரிமம் பெற்ற தொலைக்காட்சி அல்ல என்றும், டிடிஎச் விளம்பர தளம் என்றும் கூறியுள்ளது.

இதேபோல், கடந்த 31-ம் தேதி நானும் காவலன்தான் என்ற  தலைப்பில் மோடி பேசியதை, சுமார் ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பியதற்காக விளக்கம் கேட்டு தூர்தர்ஷன் நிறுவனத்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EC #NaMoTV
Tags:    

Similar News