செய்திகள்

பண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது - அருண்ஷோரி புகார்

Published On 2018-11-12 12:07 GMT   |   Update On 2018-11-12 12:18 GMT
பண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி அருண்ஷோரி கூறியுள்ளார். #Demonetisation

ஜெய்ப்பூர்:

வாஜ்பாய் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்த வரும், பா.ஜ.க. முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருண்ஷோரி பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பணிகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், கட்சி தலைவர் அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

இதை மற்றவர்களும், தவறான நபர்களும் பின் பற்றும் நிலை உருவாகி உள்ளது. இது நாட்டுக்கு நல்லது அல்ல.

 


இது போன்ற வி‌ஷயங்களை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஆனால், இந்த பணிகளை குறைவாகவே செய்கின்றனர்.

நாட்டில் அவசரகால பிரகடனம் செய்யப்பட்ட போது ஊடகங்களின் பணி மிக சிறப்பாக இருந்தது. அது போன்ற நிலை இப்போதும் வர வேண்டும்.

பண மதிப்பிழப்பு திட்டம், ராமர் கோவில் பிரச்சினை, பசுவதை விவகாரம் போன்ற வி‌ஷயங்களில் பாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகள் தவறான போக்கை காட்டுகிறது.

பண மதிப்பிழப்பு திட்டம் என்பது மிகப் பெரிய பணம் மோசடி திட்டம் ஆகும். அப்போது ஜனதன் வங்கி கணக்கு மூலம் ரூ. 42 ஆயிரம் கோடி அளவுக்கு பணங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அமித்ஷா தொடர்புடைய ஒரு கூட்டுறவு வங்கி மூலம் ஏராளமான கோடி பழைய நோட்டுகள் மாற்றப்பட்டு இருக்கிறது.

அரசியல் அதிகாரங்களை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தி இந்த நாட்டையும், சமூக பொருளாதார நிலையையும் பாதிக்க செய்துள்ளனர்.

இவ்வாறு அருண்ஷோரி கூறினார். #Demonetisation

Tags:    

Similar News