செய்திகள்

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரிக்கவில்லை - சரத் பவார் திடீர் பல்டி

Published On 2018-10-01 18:46 GMT   |   Update On 2018-10-01 18:46 GMT
ரபேல் விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தற்போது மோடியை ஆதரிக்கவில்லை என தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டார். #SharadPawar #RafaleDeal #PMModi
மும்பை :

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இடைவிடாத தாக்குதலை காங்கிரஸ் முன்னெடுத்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சமீபத்தில் ஊடகங்களிடம் பேசுகையில், ’மோடி மீது அபாண்டமாக குற்றம்சாட்டப்படுகிறது, ஒப்பந்தம் விவகாரத்தில் எந்தவிதமான ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை’ என்றார்.

2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் இருந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து வந்தது அனைவரது புருவத்தையும் உயரச்செய்துள்ளது.

இதனையடுத்து பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்தது. இதனால், அதிருப்தி அடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர், ரபேல் விவகாரத்தில் சரத் பவாரின் கருத்துக்களோடு முற்றிலும் வேறுபடுவதால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடா மாகணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் சரத் பவார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை எப்போதும் நான் ஆதரிக்கவில்லை, இந்த ஒப்பந்தத்தில் விமானங்களின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது ஏன்?, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ரபேல் தொடர்பான அனைத்து விவரங்களையும் விளக்க வேண்டும். இல்லையெனில் இது தொடர்பாக அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்’ என அவர் தெரிவித்தார். #SharadPawar #RafaleDeal #PMModi
Tags:    

Similar News