செய்திகள்

நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம்- உச்ச நீதிமன்றம் அனுமதி

Published On 2018-09-26 07:50 GMT   |   Update On 2018-09-26 07:50 GMT
நீதிமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி உள்ளது. #CourtProceedingsLive #SupremeCourt
புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் மீதான விசாரணையை நேரடியாக ஒளிபரப்பவும், வீடியோ ஆவணமாக பதிவு செய்யவும் உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

‘நேரடி ஒளிபரப்பு செய்வதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. முக்கியமான செயல்திட்டத்தை தொடங்குகிறோம். முதலில் அதை ஆரம்பித்து, அது எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்போம்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். #CourtProceedingsLive #SupremeCourt
Tags:    

Similar News