செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் - போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

Published On 2018-08-22 09:08 GMT   |   Update On 2018-08-22 09:08 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் தேசியக்கொடிகளை ஏந்தியபடி அந்த நாட்டிற்கு ஆதரவாக முழக்கமிட்டனர். #JammuAndKashmir #JKClashes
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒரு சில பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள் அடைக்கலம் கொடுப்பதுடன், போலீசார் மற்றும் ராணுவம் வந்தால் கற்களை வீசி  தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கின்றனர்.

பாகிஸ்தான் தேசியக்கொடிகளை காட்டுவதும், பயங்கரவாத இயக்கத்தின் கொடியை காட்டுவதும் என அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இது பாதுகாப்பு படைகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. சில சமயங்களில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் நேரடியாக மோதும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் தேசியக்கொடிகளையும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்க கொடிகளையும் ஏந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.



ஸ்ரீநகரில் கற்களைவீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அனந்த்நாக் பகுதியில் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசியும் கம்புகளால் தாக்கியும் விரட்டியடித்தனர். குல்காம் மாவட்டத்தில் ஈத்கா மைதானத்தின் வெளியே ஒரு போலீஸ்காரரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் பல்வேறு பகுதிகளில் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. #JammuAndKashmir #JKClashes #JKStonePelters
Tags:    

Similar News