செய்திகள்

வாஜ்பாய் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

Published On 2018-08-17 02:53 GMT   |   Update On 2018-08-17 02:53 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
புதுடெல்லி:

முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவை தோற்றுவித்தவருமான  அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.



இந்நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாஜ்பாய்க்கு மலரஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee 
Tags:    

Similar News