செய்திகள்

இந்திய சாதனைப் புத்தகத்தில் ஆந்திர ஸ்வீட்

Published On 2018-08-11 06:10 GMT   |   Update On 2018-08-11 07:07 GMT
ஆந்திரத்தில் செய்யப்படும் ஸ்வீட்டுகளில் முக்கியமாக உள்ள பூத்தரேக்குலு என்ற இனிப்பு, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இண்டியா-புக் ஆஃப் ரிகார்ட்ஸ்) இடம் பெற்றுள்ளது. #Pootharekulu #IndianBookofRecords
திருமலை:

ஆந்திர மாநிலம் விஜயவாடா உள்ளிட்ட வடமாவட்டப் பகுதிகளில் பூத்தரேக்குலு என்ற அரிசி மாவினால் செய்யப்படும் ஸ்வீட் மிகவும் புகழ்பெற்றது. உணவுப் பிரியர்கள் இதைவிரும்பி உண்பர்.

ஆந்திரத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், ஆந்திரத்தின் பிரத்யேக உணவுகளான தம் பிரியாணி, ஹலீம் உள்ளிட்ட உணவுகள், தெலங்கானாவின் பிரத்யேக உணவுகளாக மாறின.

அதனால் ஆந்திரத்துக்கு என சில பிரத்யேக உணவுகளை மாநில அரசு தேர்ந்தெடுத்து அதை சுற்றுலாத்துறை மூலம் உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி முதலில் மூங்கிலில் உள்ள துளையில் கோழிக்கறி துண்டுகளை அடைந்து செய்யப்படும். 'பேம்பூ சிக்கன்' என்ற உணவு வகை ஆந்திரத்தின் பிரத்யேக உணவாக அறிமுகம் செய்யப்பட்டது.

இதை உண்பதற்காகவே பலரும் ஆந்திர சுற்றுலாத்துறை மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜயவாடா மாவட்டத்தின் மிகப் புகழ்பெற்ற இனிப்பான பூத்தரேக்குலுவையும் சுற்றுலாத்துறை மூலம் உலக மக்களுக்கு அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்தது.



அதற்காக சுற்றுலாத்துறை மூலம், விஜயவாடாவில் உள்ள பேரம் பூங்காவில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு பூத்தரேக்குலு இனிப்பை, தயார் செய்து, இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வைத்துள்ளது.



இந்த இனிப்பை 50 பெண்கள் இணைந்து தயாரித்தனர்.

சாதனைப் புத்தகத்தில் பூத்தரேக்குலு பதிவு செய்யப்பட்டதற்கான பத்திரத்தை ஆந்திர சுற்றுலாத்துறை செயலர் முகேஷ்குமாரிடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்தனர். #Pootharekulu #IndianBookofRecords
Tags:    

Similar News