செய்திகள்

கருப்புப் பணம் பதுக்கல் பற்றிய தகவல் அளிக்க சுவிட்ஸர்லாந்து - இந்தியா பேச்சுவார்த்தை

Published On 2018-08-10 13:30 GMT   |   Update On 2018-08-10 13:30 GMT
சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை பெற அந்நாட்டு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் இன்று ஆலோசனை நடத்தினார். #IndiaSwitzerlanddiscuss
புதுடெல்லி: 

சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் ரகசியமாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை அளிக்க புதிய நெறிமுறைகளை ஏற்படுத்த அந்நாட்டு பாராளுமன்றக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளியுறவுத்துறை மந்திரி இக்னாஸியோ கேஸிஸ், டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி இதுதொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் பதுக்கியுள்ள நபர்களின் வங்கி கணக்கு எண், அவரது பெயர், முகவரி, பிறந்த தேதி, வரி அடையாள எண் (டின்) முதலீடு செய்துள்ள பணத்தின் மூலம் கிடைத்த வட்டி மற்றும் ஈவுத்தொகை, காப்பீடு திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், சொத்துகளை விற்றுபெற்ற மூலதனங்கள் போன்ற விபரங்கள் பரிமாறப்பட வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiaSwitzerlanddiscuss #sharinginformation #informationonblackmoney
Tags:    

Similar News