செய்திகள்

மராத்தா போராட்டம் நீடிப்பு - மேலும் 2 பேர் தற்கொலை

Published On 2018-08-06 08:18 GMT   |   Update On 2018-08-06 08:18 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா போராட்டம் நீடித்து வரும் நிலையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர். #MarathaReservationProtest
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

மராத்தா சமூகத்தினர் போராட்டத்தை கைவிடு மாறு மாநில முதல்-மந்திரி பட்னாவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார். நவம் பருக்குள் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று தெரிவித்து இருந்தார். அவரது வேண்டுகோளை நிராகரித்து மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து பா.ஜனதா எம்.பி. ஹீனா சராவித் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். துலே பகுதியில் திட்டக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அப்போது காரை கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே விட்டு இருந்தார். போராட்டக்காரர்கள் அவரது காரை தாக்கினார்கள். இது தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பராபணி மற்றும் வாசிம் பகுதிகளில் இளைஞர்கள் தற்கொலை செய்தனர். #MarathaReservationProtest


Tags:    

Similar News