செய்திகள்

விடுமுறை பயண சலுகை திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண வாய்ப்பு

Published On 2018-07-30 07:07 GMT   |   Update On 2018-07-30 07:07 GMT
விடுமுறை பயணசலுகை திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மத்திய ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. #CentralGovernment #CentralGovernmentworker

புதுடெல்லி:

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வகையில் அவர்களுக்கு விடுமுறை பயண சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் அத்தகைய சலுகைகள் இருந்தாலும் அவை உள்நாட்டு அளவில் மட்டுமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதை விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டது. அதன்படி இலங்கை, பூடான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய சார்க் நாடுகளுக்கு செல்லும் வகையிலான திட்டத்தை வரையறுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே விடுமுறை பயணசலுகை திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மத்திய ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான செயல் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட பிற அமைச்சகங்களுடன் கருத்து கேட்டறிந்து வருகிறது. அதில் கருத்தொற்றுமை ஏற்படும் பட்சத்தில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிஸ்கிஸ்தான், துர்க் மெனிக்ஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் பயணம் செய்யலாம்.

அதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் பயண செலவு ஆகியவை அரசு சார்பில் வழங்கப்படும். #CentralGovernment #CentralGovernmentworker

Tags:    

Similar News