செய்திகள்

மகாராஷ்டிரா பேருந்து விபத்து - தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி இரங்கல்

Published On 2018-07-28 21:38 GMT   |   Update On 2018-07-28 21:38 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #MaharashtraAccident #RahulGandhi
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் தபோலியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள், சடாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஸ்வர் பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றனர்.

ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் மலைப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தாக்கில் தலைகீழாக விழுந்தது. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 10 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு மகாராஷ்டிரா  முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்யும் என தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் கூறுகையில், மகாராஷ்டிராவின ரெய்காட் பகுதியில் பேருந்து விபத்து குறித்து அறிந்து  மிகவும் மனவேதனை அடைந்தேன்.  காயமடைந்தவர்களுக்கு உரிய தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
#MaharashtraAccident #RahulGandhi
Tags:    

Similar News