செய்திகள்

மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படும் ஏர் இந்தியா பயணிகள்

Published On 2018-07-20 17:20 GMT   |   Update On 2018-07-20 17:20 GMT
ஏர் இந்தியா விமானத்தின் சொகுசு வகுப்பில் பயணம் செய்த குழந்தையை மூட்டைப்பூச்சி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #AirIndia
அமெரிக்காவின் நேவார்க் மற்றும் மும்பை இடையேயான விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த விமானத்தின் சொகுசு வகுப்பில் பயணம் செய்தபோது, இருக்கையில் இருந்த மூட்டைப்பூச்சி கடித்ததாக பயணி ஒருவர் ஏற்கெனவே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேவார்க்கிலிருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியா-144 விமானம் வந்தடைந்தது. அப்போது, இருக்கையில் இருந்த மூட்டைப்பூச்சி கடித்ததால் 8 மாத குழந்தை அழுதுள்ளது. அழும் குழந்தையை தாய் சோதனையிட்டபோது தடிப்புகளுடன் ரத்தம் கசிந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மூட்டை பூச்சிகள் கடித்ததில் குழந்தைக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குழந்தையின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

2 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி விமானத்தில் பயணம் மேற்கொண்டாலும் மூட்டைப்பூச்சி கடி வாங்கி செல்ல வேண்டியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.  #AirIndia
Tags:    

Similar News