செய்திகள்

வதந்திகளால் நடக்கும் படுகொலைகள் - பாராளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ் அளித்தது திரிணாமுல் காங்.

Published On 2018-07-18 04:47 GMT   |   Update On 2018-07-18 04:47 GMT
வதந்திகளால் நடக்கும் படுகொலைகள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிப்பதற்கு அனுமதி கேட்டு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. #TMCNotice #RajyaSabha #MobLynchingIssue
புதுடெல்லி:

குழந்தைக் கடத்தல், பசு கடத்தல், பசு கொலை போன்ற வதந்திகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. வதந்திகளை நம்பியும், தீவிரமாக விசாரிக்காமலும் பொதுமக்கள் இவ்வாறு கொடூரமாக நடந்துகொள்கின்றனர்.

இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதுடன், போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.



பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்றத்தில் இது பற்றி பேசுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தால் விவாதம் நடைபெறும்.

இதேபோல் மக்களவையில் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி ஜே.பி.யாதவ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். #TMCNotice #RajyaSabha #MobLynchingIssue
 
Tags:    

Similar News