செய்திகள்

நெல் வயலில் மந்திரங்களை உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்கும் - விவசாயிகளுக்கு அறிவுரை கூறிய மந்திரி

Published On 2018-07-06 01:06 GMT   |   Update On 2018-07-06 01:06 GMT
நெல் வயலில் மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தால் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு கோவா மாநில விவசாய துறை மந்திரி அறிவுரை கூறினார். #VijaySardesai #ShivYogCosmicFarming
பனாஜி:

கோவாவில் பாஜக தலைமையிலாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி கட்சியான கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய் விவசாய துறை மந்திரியாக உள்ளார்.

கோவாவைச் சேர்ந்த, சிவ யோகா பவுண்டேஷன் என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மந்திரி விஜய் சர்தேசாய் பேசியதாவது:

அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 

இப்படி சொல்லும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும். இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்து உள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #VijaySardesai #ShivYogCosmicFarming
Tags:    

Similar News