செய்திகள்

கொல்கத்தாவில் இறந்த கேரள வீரர் மரணத்துக்கு நிபா காய்ச்சல் காரணம்

Published On 2018-06-03 11:13 GMT   |   Update On 2018-06-03 11:13 GMT
கொல்கத்தாவில் இறந்த கேரள வீரர் மரணத்துக்கு நிபா காய்ச்சல் காரணம் என அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. #Nipahvirus
கொல்கத்தாவில் இறந்த கேரள வீரர் மரணத்துக்கு நிபா காய்ச்சல் காரணம்

Deceased jawan's samples test negative for Nipah virus


Nipah virus, நிபா காய்ச்சல்

கொல்கத்தா :

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ராணுவ தலைமையகமான வில்லியம் ஃபோர்டில் பணி புரிந்து வந்த சீனு பிரசாத் (27) விடுமுறைக்காக சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்றிருந்தார்.

விடுமுறை முடிந்து கடந்த மாதம் 13-ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய அவர் கடும் காய்ச்சலால் அவதியுற்று வந்தார். அவரை சக ராணுவ வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 20-ம் தேதி அனுமதித்தனர். ஆனால், சிக்கிச்சை பலனில்லாமல் கடந்த மாதம் 25-ம் தேதி சீனு பிரசாத் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு நிபா காய்ச்சல் தான் காரணமாக இருக்கும் என சந்தேகித்திருந்த வேலையில், அவரது ரத்த மாதிரிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய நோய் கிருமியியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று அவரது ரத்த மாதிரிகளின் முடிவு வெளியாகியுள்ளது. அதில் ராணுவ வீரர் சீனு பிரசாத் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தான் உயிரிழந்தார் என்பது உறுதியாகியுள்ளது. #Nipahvirus







Tags:    

Similar News