செய்திகள்

திருடு போகும் ரெயில்வே உடைமைகள் - ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்பு

Published On 2018-05-24 08:07 GMT   |   Update On 2018-05-24 08:07 GMT
இந்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒரு ஆண்டில் மட்டும் ரெயிலில் பயணிகளால் திருடப்பட்ட 2.97 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IndianRailway #RailwayProtectionForce
புதுடெல்லி:

இந்திய ரெயில்வே உலகின் மிகப்பெரிய ரெயில் அமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். தொலைதூர பயணகங்ளுக்கு பொதுவாக மக்கள் ரெயிலினை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ரெயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ரெயில்களில் மின்விசிறி, மின்விளக்கு, கழிவறையில் வாஷ் பேசன், கப், போர்வை மற்றும் தலையணை போன்ற அத்தியாவசய பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களை பயணிகள் திருடிச் செல்கின்றனர். அதை மட்டுமன்றி ரெயில்வே தண்டவாளங்களில் உள்ள இரும்பு சங்கிலி மற்றும் இரும்பு பொருட்களை திருடுவதாக தெரிகிறது.


தண்டவாளங்களில் உள்ள இரும்பு பொருட்களை திருடுவதால் ரெயில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று திருட்டு வழக்குகளில் 2016-17 ம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 5,219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது இந்த ஆண்டு 5,239 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 2017-18 ம் ஆண்டில் மட்டும் ரெயில்வேக்கு சொந்தமான 2.97 கோடி மதிப்பிலான திருடப்பட்ட பொருட்களை இந்திய ரெயில்வே பாதுகாப்புப்படையினர் மீட்டுள்ளனர்.

கேபிள்கள், சோலார் பிளேட்ஸ், ரிலே, டெலிபோன், பேட்டரி, மின்விசிறி, ஸ்விட்ச் போன்ற பொருட்களை பொதுவாக திருடர்கள் கொள்ளையடிக்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரெயில்வே போலீசார் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதால் மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndianRailway  #RailwayProtectionForce
Tags:    

Similar News