செய்திகள்

கர்நாடகா விவகாரத்தில் காங்கிரசின் மனுவை இரவே விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்

Published On 2018-05-16 20:08 GMT   |   Update On 2018-05-16 20:08 GMT
கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress

பெங்களூர்:

கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது.  

இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜ்பவனில் இன்று காலை 9.00 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மனுவை அவசர வழக்காக இரவே விசாரிக்க, தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்குமாறும் பதிவாளரிடம் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதையடுத்து காங்கிரஸ் அளித்த மனு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, பதிவாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் அளித்த மனுவை இரவே விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எலஸ்.ஏ.போப்டே ஆகிய  3 நீதிபதிகள் கொண்ட அமர்வு காங்கிரசின் மனுவை விசாரிக்கிறது. #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress
Tags:    

Similar News