செய்திகள்

ஐபிஎல் சூதாட்டம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை

Published On 2018-05-11 10:24 GMT   |   Update On 2018-05-11 10:24 GMT
ஐபிஎல் சூதாட்டம், ஜே டே கொலை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த மகாராஷ்டிரா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமன்ஷு ராய் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். #HimanshuRoy
மும்பை:

மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருப்பவர் ஹிமன்ஷு ராய். பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவராக இருந்த இவர் 2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு, வக்கீல் பல்லவி கொலை வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தவர்.

ஹிமன்ஷு ராய் புற்றுநோய் காரணமாக நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தெற்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் மதியம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 2015-ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட போது, மூத்த அதிகாரிகளுக்கு அரசு உரிய மரியாதை அளிக்க வில்லை எனக்கூறி முதல்வருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #HimanshuRoy #MumbaiPolice
Tags:    

Similar News