செய்திகள்

ஹம்ரோ சிக்கிம் - புதிய கட்சி தொடங்கிய இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்

Published On 2018-04-26 13:12 GMT   |   Update On 2018-04-26 13:43 GMT
திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா ஹம்ரோ சிக்கிம் என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார். #BhaichungBhutia
கொல்கத்தா:

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா, கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014 பாராளுமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

திடீரென திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் பூட்டியா விலகினார். இதனை அடுத்து, அவரை வளைக்க பா.ஜ.க மற்றும் சிக்கிம் க்ராந்திகாரி மோர்சா கட்சியினர் இடையே போட்டி நிலவியது. இந்நிலையில், ஹம்ரோ சிக்கிம் என்ற பெயரில் புதிய கட்சியை அவர் டெல்லியில் இன்று தொடங்கினார்.

“இந்த கட்சி சிக்கிம் மக்களுக்கானது. அதிகாரம் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்” என பூட்டியா கட்சி அறிவிப்பு நிகழ்ச்சியில் கூறினார். விரைவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #BhaichungBhutia
Tags:    

Similar News