செய்திகள்

2-வது திருமணம் செய்ததால் கோர்ட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்

Published On 2018-04-24 06:32 GMT   |   Update On 2018-04-24 06:32 GMT
ஒடிசா மாநிலத்தில் இன்னொருவரை 2-வது திருமணம் செய்ததால் மனைவியை நீதிமன்ற வளாகத்தில் கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பல்பூர்:

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது24). ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரான இவரது மனைவி பெயர் சங்கீதா சவுத்ரி (18).

4 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனையால் சங்கீதா கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

ரமேஷ்குமார் மாமியார் வீட்டுக்கு சென்று மகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டும் அவர் மறுத்து விட்டார். அத்துடன் ரமேஷ்குமார் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக கூறி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதாவுக்கு பெற்றோர் வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதுதெரிய வந்ததும் ரமேஷ் குமார் ஆவேசம் அடைந்தார்.

நேற்று சங்கீதா தொடர்ந்த வழக்கு குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சங்கீதா தனது தாயார் மற்றும் 3வது சகோதரியுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

அப்போது ரமேஷ்குமாரும் கோர்ட்டுக்கு வந்தார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை சரமாரியாக வெட்டினார். அருகில் இருந்த மாமியார் மற்றும் சகோதரியையும் வெட்டினார்.

இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரமேஷ் குமாரை பிடித்துக் கொண்டு அவரிடம் இருந்த அரிவாளை கைப்பற்றினார்கள்.

படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சங்கீதா இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News