செய்திகள்

எனது வெளிநாட்டு சொத்து மதிப்பு ரூ.746 கோடிதான்- விஜய் மல்லையா தகவல்

Published On 2018-04-17 06:31 GMT   |   Update On 2018-04-17 06:31 GMT
எனது வெளிநாட்டு சொத்து மதிப்பு ரூ.746 கோடிதான் என்று லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்:

பெங்களூர் தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அவர்மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை விசாரணை ஏஜென்சிகள் மேற்கொண் டுள்ளன.

விஜய் மல்லையா வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை வைத்து அங்கு அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதையடுத்து அவரது வெளிநாட்டு சொத்துக்களை முடக்கி வைக்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்தனர். இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை சி.பி.ஐ. மூலம் பறிமுதல் செய்த வங்கிகள் அதனை ஏலம் விட்டு கடனை மீட்டு வருகின்றன.

இதற்கிடையே விஜய் மல்லையா சார்பில் அவரது வக்கீல்கள் லண்டன் ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

தொழில் அதிபர் விஜய் மல்லையா மாதம் ரூ.15 லட்சம் செலவு செய்து வருகிறார். இங்குள்ள அவரது கார்கள் மற்றும் இதர சொத்துக்களை பராமரித்து வருகிறார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் சொத்துக்கள் அதில் அடக்கம் இல்லை.

அவரது வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு ரூ.746 கோடிதான் ஆனால் வங்கிகள் அவர் மீது ரூ.9000 கோடி என்று புகார் கொடுத்துள்ளன. இது மிகைப்படுத்தப்பட்ட தொகை ஆகும். அவரது சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதை நீக்க வேண்டும்.

விஜய் மல்லையா குடும்பத்தினர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் இந்திய கோர்ட்டுகளின் உத்தரவுக்கு பதில் அளிக்க தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News