செய்திகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ராகுல் காந்தி சந்திப்பு

Published On 2018-02-23 19:14 GMT   |   Update On 2018-02-23 19:14 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் சந்தித்தார். #JustinTrudeau #RahulGandhi
புதுடெல்லி:

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார்.

அதன்பின்னர், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். மேலும், டெல்லியில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் சந்தித்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இன்று சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினோம். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். எனது தாயார் சோனியா காந்தியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார் என பதிவிட்டுள்ளார்.

கனடா பிரதமருடனான சந்திப்பின்போது முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா உடனிருந்தார். #CanadaPM #JustinTrudeau #RahulGandhi
Tags:    

Similar News