செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் 980 விமானங்கள் இயக்கி சாதனை

Published On 2018-02-04 22:31 GMT   |   Update On 2018-02-04 22:31 GMT
மும்பை விமான நிலையம் கடந்த மாதம் 20-ம் தேதி அன்று ஒரே நாளில் 980 விமானங்களை இயக்கி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது. #MumbaiAirport #Handles980Flightsin24Hours
மும்பை:

மும்பை விமான நிலையம் உலகிலேயே மிகவும் பிசியாக உள்ள ஒற்றை ஓடுபாதை விமான நிலையம் ஆகும். அங்கு எப்போதுமே விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் வரிசையில் காத்து கிடக்கும். ஒரு விமானம் புறப்பட்ட, சிறிது நேரத்தில் அடுத்த விமானம் தரையிறங்கும். இப்படியே மாறி மாறி விமானங்கள் இயங்கியபடி இருக்கும். அங்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒரு நாளில் 974 விமானங்கள் இயக்கப்பட்டன. இதுவே சாதனையாக கருதப்பட்டது.

இந்நிலையில் இந்த சாதனையை தற்போது மும்பை விமான நிலையம் முறியடித்துள்ளது. அங்கு கடந்த மாதம் 20-ம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் தனது சொந்த சாதனையை மும்பை விமான நிலையம் முறியடித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கேட்விக் ஒற்றை ஓடுபாதை விமான நிலையமும் கோடைக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 870 விமானங்களை இயக்குகிறது. இவ்விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 55 விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மும்பை விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 52 விமானங்களை இயக்கியுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிய அளவில் பிசியான விமான நிலையங்களிம் பட்டியலில் மும்பை விமான நிலையம் 14-வது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இந்த விமான நிலையம் 4 கோடியே 44 லட்சத்துக்கு 80 ஆயிரம் பயணிகளை கையாண்டுள்ளது. #MumbaiAirport #Handles980Flightsin24Hours #BreaksOwnRecord #tamilnews
Tags:    

Similar News