செய்திகள்

குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச கவர்னராக நியமனம்

Published On 2018-01-19 17:37 GMT   |   Update On 2018-01-19 17:53 GMT
குஜராத் முன்னாள் முதல்வரும் பா.ஜ.க மூத்த பெண் தலைவருமான ஆனந்திபென் படேல் மத்திய பிரதேசம் மாநில கவர்னராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
புதுடெல்லி:

குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, பிரதமரானதும் ஆனந்திபென் படேல் அம்மாநில முதல்வராக பதவியேற்றார். படேல்கள் இடஒதுக்கீடு போராட்டம், தலித்துக்கள் மீதான தாக்குதலால் ஏற்பட்ட அவப்பெயர்கள் காரணமாக 2016-ம் ஆண்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவர் மத்திய பிரதேச கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவர் பதவியேற்க உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னர் பதவி காலியாக உள்ளது. இந்த பொறுப்பை குஜராத் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
Tags:    

Similar News