செய்திகள்

குஜராத்: இளைஞர் முகாமில் திடீர் தீ விபத்து - 3 மாணவிகள் பலி

Published On 2018-01-13 06:08 GMT   |   Update On 2018-01-13 06:08 GMT
குஜராத் மாநிலம் பிரான்சலா மாவட்டத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காந்திநகர்:

குஜராத் மாநிலம் பிரான்சலா மாவட்டத்தில் வேதிக் மிஷன் அறக்கட்டளை சார்பில் ராஷ்டிரிய கதா ஷிபிர் என்ற சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தேசிய ஒருங்கிணைப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு இந்த முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. 15-க்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தீ அனைத்து இடங்களிலும் பரவியதால் பல மாணவிகள் சிக்கிக்கொண்டனர். தீயில் கருகி 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து நடக்கும் போது பாலிவுட் நடிகர் முகேஷ் கன்னா சம்பவ இடத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

6-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த முகாமில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரண்டு நாள்களுக்கு முன்னர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News