செய்திகள்

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் பேட்டி

Published On 2018-01-12 07:08 GMT   |   Update On 2018-01-12 07:08 GMT
இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று குற்றம் சாட்டினர். #SupremeCourt
புதுடெல்லி:

இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன் லோகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.  அப்போது, அவர்கள் கூறுகையில், உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று குற்றம் சாட்டினர்.

“உச்ச நீதிமன்ற வரலாற்றில் அசாதாரண நிகழ்வாக முதல் முறையாக நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்கள் குறைகளை முறையிட்டோம்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SupremeCourt #TamilNews
Tags:    

Similar News