செய்திகள்

பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட கவர்னர்கள் குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Published On 2018-01-11 00:05 GMT   |   Update On 2018-01-11 00:05 GMT
சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் முகவர்களாக கவர்னர்களின் பங்களிப்பு என்ன? என்பது குறித்த அறிக்கையை கவர்னர்கள் குழுவினர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தாக்கல் செய்தனர்.
புதுடெல்லி:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 48-வது கவர்னர்கள் மாநாட்டில், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாநில கவர்னர்களின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்ய கவர்னர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவைச் சேர்ந்த கவர்னர்கள் பன்வாரிலால் புரோகித் (தமிழ்நாடு), இ.எஸ்.எல்.நரசிம்மன் (ஆந்திரா, தெலுங்கானா), ராம்நாயக் (உத்தரபிரதேசம்), தாதகடா ராய் (திரிபுரா) ஆகியோர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் முகவர்களாக கவர்னர்களின் பங்களிப்பு என்ன? என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர். தங்கள் மாநிலங்களில் அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் கவர்னர்கள் வழிகாட்டிகளாக செயல்படுவது குறித்து அதில் யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள கவர்னர்களில் இமாசலபிரதேச மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் மட்டும் இந்த சந்திப்பின் போது உடன் செல்லவில்லை.

மேற்கண்ட தகவலை ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.  #tamilnews
Tags:    

Similar News