செய்திகள்

சென்னையில் முதல்முறையாக ரோபோக்கள் உணவு பரிமாறும் உணவகம்

Published On 2017-12-13 12:34 GMT   |   Update On 2017-12-13 12:34 GMT
சென்னையில் உள்ள உணவகத்தில் ரோபோக்கள் உணவு பரிமாறுவது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. மனிதர்களுக்கு பதிலாக பல துறைகளில் ரோபோக்கள் பணியில் நியமிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 'ரோபோட்' என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் வெயிட்டர்களாக  செயல்படுகின்றன. இதற்காக இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளார்.



உணவகத்தில் உள்ள மேஜையில் பொருத்தப்பட்டுள்ள ஐ-பேட் மூலம் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். அது டிரன்ஸ்மிட்டர் மூலமாக சமையல் அறைக்கு செய்தி சென்றடையும். அதை கண்ட சமையல் காரர்கள் சமைத்து அதனை ரோபோட்டின் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர். அது உணவை வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்.

ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் அவை வாடிக்கையாளர்களை சென்றடையும். ரோபோவானது வாடிக்கையாளர் வாசலில் வரும் போதே அவர்களை வரவேற்று மேஜையில் அமர வைக்கும். வாடிக்கையாளர்களை நினைவில் கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும், உணவகத்தில் உள்ள ரோபோக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் மனிதர்கள் உணவு பரிமாறி பார்த்த வாடிக்கையாளர்க்கு ரோபோர்ட் உணவு கொடுப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த உணவகம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

Tags:    

Similar News