செய்திகள்

பத்மாவதி படத்திற்கு தாவூத் இப்ராகிம் நிதி: ராஜ்புத் அமைப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2017-11-20 05:26 GMT   |   Update On 2017-11-20 05:26 GMT
வட மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பத்மாவதி படத்திற்கு தாவூத் இப்ராகிம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஜெய்ப்பூர்:

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்படுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மறு தணிக்கை செய்யப்பட்ட பின்னர் படத்தை வெளியிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்த நிலையில் அதை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் நிதியுதவி அளித்துள்ளதாக ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி கூறுகையில், “படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்கள் வருகிறது. படத்திற்கு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தாவூத் இப்ராகிம் குழுவினரிடமிருந்து நிதி அளிக்கப்படுகிறது” என்றார்.
Tags:    

Similar News